சுஷ்மா சுவராஜுக்கு திடீர் உடல்நலக்குறைவு- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் சுஷ்மா சுவராஜுக்கு நேற்று மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் 7.22 மணியளவில், அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சர்க்கரை நோய் மற்றும் சில உடல் உபாதைகள் காரணமாக சுஷ்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் கார்டியோ -நியூரோ சென்டரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அப்பிரிவின் தலைமை மருத்துவர் பல்ராம் ஐரான் மேற்பார்வையின் கீழ், சுஷ்மாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அவருக்கு எண்டோகிரினோலோஜிகல் (endocrinological) பரிசோதனை செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஷ்மா சுவராஜ் சிகிச்சைப் பெற்றார்.

இதேபோல் கடந்த அக்டோபர் 25ம் தேதி வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...