டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசு பிரச்சினையை கண்காணிக்க கோரி மனு: நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

டெல்லி மற்றும் அண்டை நகரங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கண்காணிக்க கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் கடந்த ஒரு வாரமாக காற்றில் மாசு அதிகரித்து உள்ளது. விடிந்து பகல் பொழுது வந்த பின்னரும் காற்றில் மாசு காணப்படுவதால் டெல்லி நகர மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளும், வயதானோரும் மூச்சு விட சிரமப்படுகின்றனர். கண் எரிச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். இதனால் பகல் நேரத்தில் டெல்லியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. மக்கள் சுவாச கவசம் அணிந்து நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். காற்று மாசு அபாய கட்டத்தில் இருப்பதால், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு அமைப்பின் ((Prevention and Control) Authority (EPCA) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் டெல்லி மற்றும் அண்டை நகரங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை கண்காணிக்கவும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.  à®‡à®¨à¯à®¤ மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர் மற்றும் நீதிபதிகள் டி ஒய் சந்திரசவுத், எல். நாகேஷ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை பிற்பகல் 3.30 மணியளவில் மனுவை விசாரிப்பதாக கூறியது. 

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டுவதை அடுத்து பல்வேறு உத்தரவுகளை  à®šà¯à®ªà¯à®°à¯€à®®à¯ கோர்ட்டு பிறப்பித்து இருந்தது. டீசலில் இயங்கும் எஸ் யூவி கார்களை பதிவு செய்யக்கூடாது. 2 ஆயிரம் சிசிக்கும் அதிகமாக திறன் கொண்ட கார்களை அனுமதிக்க கூடாது போன்ற பல்வேறு உத்தரவுகள் அதில் அடங்கும். இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய கார் உற்பத்தி சங்கம் மற்றும் பிற அமைப்புகள் அளித்த பிரமாணப்பத்திரத்தை அடுத்து கூடுதலாக ஒரு சத வீத வரியுடன் 2 ஆயிரம் சிசிக்கு அதிகமான திறன் கொண்ட கார்கள் விற்பனைக்கு அனுமதி அளித்தது நினைவிருக்கலாம்

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...