காஷ்மீரில் நீடிக்கும் துப்பாக்கிச் சண்டை: எல்லையில் 300 தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லையில் ஊடுருவ 300 தீவிரவாதிகள் காத்திருப்பதால் எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதில் பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர். இதே வேலையில் பூஞ்ச் வட்டாரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்  à®®à¯à®¯à®±à¯à®šà®¿à®¯à¯ˆ இந்திய வீரர்கள் முறியடித்தனர். 

இதை தொடர்ந்து ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பாட்டார். இந்நிலையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ 250 முதல் 300 தீவிரவாதிகள் முயன்றதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு வசதியாக இந்திய படையினரை திசை திருப்பவே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே காஷ்மீரில் மர்மநபர்களால் பள்ளிகளுக்கு தீ வைக்கப்படுவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...