என்டிடிவியை தொடர்ந்து மேலும் 2 சேனல்களுக்கு தடை

புதுடெல்லி: என்டிடிவி இந்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு சேனல்களுக்கு ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதன்கோட் தாக்குதலை ஒளிபரப்பிய என்டிடிவி இந்தி சேனலுக்கு நவம்பர் 9ம் தேதி ஒரு நாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தேசிய நலனை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரண்டாவது எமர்ஜென்சியை போல பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சூழலில் என்டிடிவியை தொடர்ந்து மேலும் இரண்டு சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அசாமில் உள்ள நியூஸ் டைம் அசாம் என்ற சேனலுக்கும், கேர்வேர்ல்டு டிவி என்ற சேனலுக்கும் அதே 9ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை ஒருநாள் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆணையை கடந்த 2ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...