பாக். பீரங்கி தாக்குதலில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு; பாகிஸ்தான் ராணுவ சாவடிகளை சீர்குலைய செய்தது இந்திய ராணுவம்

ஸ்ரீநகர், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார். இன்று நடந்த தாக்குதலில் இரு வீரர்கள் வீர மரணம் அடைந்து உள்ளனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ சாவடிகள் சீர்குலைத்தது.

 

கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நுழைந்து 7 பயங்கரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதை ஜீரணிக்க முடியாத பாகிஸ்தான், காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் கிராமங்களை குறிவைத்து வேண்டும் என்றே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிறிய பீரங்கிகளாலும், தானியங்கி ரக துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 9 ராணுவ வீரர்கள் பலியாகி விட்டனர். அப்பாவி மக்கள் 10 பேர் பரிதாபமாக உயிர் இழந்தும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். 

எல்லையோர இந்திய கிராமங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளும் பலத்த சேதம் அடைந்தன. பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தும் வருகிறது. கடந்த வாரம் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் 4 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா கடுமையாக தாக்குதல் தொடுத்தது. இதில் 40-க்கும் அதிகமான பாகிஸ்தான் ராணுவத்தினர் பலியானார்கள். 

இதனால் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 2 நாட்களாக எந்தஒரு அசம்பாவித நிகழ்வும் நேராத நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

காலையில் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளால் 4 இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக பயங்கர தாக்குதல் நடத்தியது. எல்லையோர இந்திய கிராமங்களில் வசிக்கும் பெரும்பான்மையானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு விட்டதால் பொதுமக்கள் தரப்பில் பாதிப்பு எதுவும் எல்லை. 

“பாகிஸ்தானின் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தார்.  à®ªà®¾à®•ிஸ்தான் ராணுவம் 82 மி.மீட்டர் மற்றும் 120 மி.மீ. ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டு இடைவிடாமல் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் அதே ரக ஆயுதங்களால் தக்க பதிலடி கொடுத்தது. இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது“ என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. “கிருஷ்ணா காதி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் மூலம் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்தது. 2 இடங்களில் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றதை ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து என்று தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த சிப்பாய் குர்சேவாக் சிங் (வயது 23) என்று தெரிவிக்கப்பட்டது. இவர் பஞ்சாப் மாநிலம் தரண் தரண் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்கள் இருப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. பொதுமக்கள் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் வெளியேற்றப்பட்டு விட்டதால் பெரிய அளவில் சேதம் எதுவும் கிடையாது. 

பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார். 2 வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானின் இந்த அடாவடிக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து உள்ளது. இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தானின் ராணுவ சாவடிகள் சீர்குலைக்கப்பட்டது. எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ள இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு திறன்பட பதிலடியை கொடுத்து வருகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...