குழந்தைக்கு தாய்ப்பாலை தடுத்த தந்தை, மந்திரவாதி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் (28). இவரது மனைவி ஹப்சத் (21). கர்ப்பிணியான ஹப்சத்தை பிரசவத்திற்காக முக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 2 நாட்களுக்கு முன் காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் கொடுக்கும் படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் குழந்தைக்கு 5 நேர தொழுகை கழிந்த பின்னரே தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று குழந்தையின் தந்தை அபுபக்கர் கூறினார். 

டாக்டர்கள் பல முறை கூறியும் தாய்ப்பால் கொடுக்க அபுபக்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த், தாமரச்சேரி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.  à®‡à®¨à¯à®¨à®¿à®²à¯ˆà®¯à®¿à®²à¯ இவ்விவகாரம் குறித்து மருத்துவமனை நர்ஸ் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் குழந்தையின் பெற்றோர் அபுபக்கர், ஹப்சத் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த நிலையில் குழந்தையின் தந்தை அபுபக்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அபுபக்கர், அப்பகுதியை சேர்ந்த ஐதூருஸ் என்ற மந்திரவாதி கூறியதால்தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முக்கம் போலீசார் அபுபக்கர் மற்றும் மந்திரவாதி ஐதூருஸை கைது செய்தனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...