தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுங்கள்: 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்சிஆர்) காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று டெல்லி உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய சுற்றுப் புறச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ் தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் அடங்கும். அண் மைக் காலமாக என்சிஆர் பகுதியில் காற்று அதிகமாக மாசு அடைந்து வருகிறது. இதற்கு, அரியானா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் உள்ள அனல் ஆலைகளிலிருந்து வெளிவரும் சாம்பல், பயிர்கள் தீயில் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும். இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் உள்ளன. இதனால் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கிறது.

இதே நிலை நீடித்தால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. டெல்லி, அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர்களுடனான சந்திப்பை நேற்று முன்தினம் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் நடத்தியது. அந்த கூட்டத்தில், என்சிஆர் பகுதியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க 5 மாநில அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், பயிர்களை எரிப்பது, மாசு ஏற்படுத்தும் செங்கல் ஆலைகளை மூடுதல், அனல் ஆலைகளிலிருந்து சாம்பல் வெளியேறுவதை கட்டுப்படுத்துதல் மற்றும் சாலைகளில் தூசி பிரச்சினையை திறம்படகையாளுதல் போன்ற நடவடிக்கைகளை 5 மாநிலங்களும் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.

காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு ஏற்படாத வகையில் ஆலைகளை இயக்குமாறு என்டிபிசிக்கு விரைவில் கடிதம் எழுதபோவதாக கெஜ்ரிவால் அரசு தெரிவித்தது. மேலும், காற்று மாசினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தும் படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மத்திய அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும், ஒவ்வொரு காலாண்டும் காற்று மாசுவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்தது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...