எல்லையில் பாக்.,-கின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மன்கோட்டில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு இந்திய படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகள், சுமார் 4 இடங்களில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன.

இப்பகுதியில் பொது மக்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உரிய பதிலடியை இந்திய படையினர் கொடுத்து வருகின்றனர். கடந்த மாதம் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் தரப்பு தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...