காற்று மாசுபாடு காரணமாக, டெல்லியில் 1,800 ஆரம்பப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

டெல்லியில் கடந்த ஒரு வருடமாக காற்று மிகவும் மாசுபட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது டெல்லி அரசு. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி பலரும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடியதில் அன்று இரவே டெல்லி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் மக்கள் சுவாசக் கோளாறுகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பலரும் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். முக்கியமாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருவதால், டெல்லியில் உள்ள 1,800 ஆரம்பப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பிறகே பெட்ரோல், டீசல் போன்ற வாகன புகையின் காரணமாக காற்றானது அதிக அளவு மாசுபடுவதாக டெல்லி அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரும் திங்கட் கிழமைக்குள் புகைமூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சுகாதரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று சுகாதார துறை அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...