முதல்வர் ஜெயலலிதா அவசரப் பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து விரைவில் தனி வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாக அதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நுரையீரலில் ஏற்பட்டிருந்த தொற்று பாதிப்பு முழுவதும் சரியாகிவிட்டது. அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டார். செயற்கை சுவாசக் கருவியும் அகற்றப்பட உள்ளது. தற்போது அது அவ்வப்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று அதிமுக மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக அவர் கஞ்சி போன்ற உணவுகளை உட்கொண்டு வருகிறார். தற்போது அவருடன் இருப்பவர்களுடன் ஜெயலலிதா பேசி வருகிறார் என்றும் கூறினார் பொன்னையன்.

காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...