கப்பல் உடைக்கும் தளத்தில் வெடிவிபத்து: பாகிஸ்தானில் 10 தொழிலாளர்கள் சாவு

பாகிஸ்தானில் கப்பல் உடைக்கும் தளத்தில் பழைய எண்ணெய்க் கப்பலை உடைக்கும் பணியின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். 30 தொழிலாளர்களின் நிலைமை குறித்துத் தகவல் இல்லை.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், கடானி நகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் பயன்படுத்தப்படாத பழைய சரக்குக் கப்பலை உடைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தீச்சுவாலை மூலம் இரும்பை உருக்கி வெட்டும் "வெல்டிங்' முறையில் கப்பல் உடைப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்த எண்ணெய்க் கப்பலில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.

கப்பலின் பகுதிகள் தொடர்ந்து பல முறை வெடித்துச் சிதறியதில் அந்தக் கப்பல் முழுவதும் தீப்பிடித்தது.

இதில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், கப்பலுக்குள் சிக்கியுள்ள சுமார் 30 தொழிலாளர்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை.

கொழுந்து விட்டு எரியும் எண்ணெய்க் கப்பலில் மேலும் வெடிவிபத்து ஏற்படலாம் என்பதால், மீட்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த அனைவரும் கராச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் மம்னூன் ஹுசைனும், பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...