காஷ்மீர் பள்ளிகளை மூடச் சொல்லி மிரட்டும் பாக்., படைகள்

ஜம்மு: காஷ்மீரின் எல்லையோரப் பகுதியில் உள்ள பள்ளிகளை மூடுமாறு பாக்., படைகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றன.

பள்ளிகள் மூடல்:

எல்லையில் பாக்., படைகள் உடனான பயங்கர துப்பாக்கிச் சண்டை காரணமாக காஷ்மீரின் எல்லையோரத்தில் இருக்கும் 200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. ஜம்முவில் உள்ள 174 பள்ளிகள் மற்றும் சம்பா மாவட்டத்தில் உள்ள 45 பள்ளிகளையும் மறுஉத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர் மிரட்டல்:

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீரில் நிலவிய பதற்ற நிலை காரணமாக அனைத்து கல்விநிறுவனங்களையும் மூட வேண்டும் என பிரிவினைவாதிகள் உத்தரவிட்டனர். இதன் காரணமாக கடந்த 4 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளை மூடுமாறு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக இதுவரை 12 பேரை கைது செய்துள்ளோம். மேலும் 23 பேரை தேடி வருகிறோம். இந்நிலையில் தற்போது துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வரும் பாக்., படைகளும் மிரட்டல் விடுத்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

மூடியே இருக்கட்டும்:

எல்லையில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அக்டோபர் 3ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து பாக்., படைகள் எல்லையில் தாக்குதல் நடத்தி வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, மறுஉத்தரவு வரும் வரை சர்வதேச எல்லை மற்றும் ஜம்முவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பள்ளிகளை மூட நவம்பர் 1 ம் தேதி முதல் உத்தரவிட்டுள்ளதாக ஜம்மு துணை கமிஷனர் சிம்ரன் தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...