காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி

காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி உட்பட பல பகுதிகளில், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நேற்று தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர் மான்ஜீத் சிங்கை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று உடலைத் துண்டாக்கினர். இதில் அதிர்ச்சி அடைந்த ராணுவத்தினர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது 2 நாட்களுக்கு முன்னர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 4 முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள மென்தாம் செக்டார் மற்றும் ரஜோரி பகுதி யில் மன்காட், பாலாகோட் ஆகிய இடங்களில் எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டருகே நேற்று காலை 9 மணியளவில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

மேலும், சிறிய ரக 120 மி.மீ., மற்றும் 82 மி.மீ. பீரங்கி குண்டுகளை இந்தியப் பகுதியில் வீசி தாக்குதல் நடத்தினர்.இரு தரப்புக்கும் இடையில் பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ரஜோரி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் பிமல் தமாங்(20) என்ற ராணுவ வீரர் பலியானார். மேலும் தவ்ஸீர் பீ(50) என்ற பெண்ணும் பலியானார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...