8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: RSS-க்கு தொடர்பு இருக்கலாம் என காங்., குற்றச்சாட்டு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சிறையிலிருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடு முழுவதும் கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். இது முக்கியமான பிரச்சனை என கூறியுள்ள அவர், ஆனால் சிமி தீவிரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அல்லது அவற்றை சார்ந்த சில அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சிமி தீவிரவாதிகள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை மத்தியபிரதேச காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. என்கவுன்டர் வீடியோ காட்சியில் அசைவற்று கிடக்கும் தீவிரவாதிகள் மீது மீண்டும் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதனால் சிமி தீவிரவாதிகள் கொல்லப்பட்டது போலியானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இதனை நிராகரித்துள்ள காவல்துறையினர் இது திட்மிட்டு நடத்தப்படவில்லை என்றனர். தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர். என்கவுன்டரின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.    

சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்ப உதவியர்கள் குறித்தும் தேசிய புலனாய்வு மூலம் விசாரணை நடத்தப்படும் என மத்தியபிரதேச அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் பூபேந்தர் சிங், இந்த தீவிரவாதிகள் ஏற்கனவே சிறையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் என்றார்.  முன்னதாக போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் 8 பேர் நேற்று அதிகாலை சிறைகாவலரை கொன்று விட்டு தப்பினர். பின்னர் தப்பிச் சென்ற அவர்களை புறநகர் பகுதியில் சுற்றிவளைத்த போலீஸார் அவர்களை சுட்டு கொன்றனர்

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...