இந்திய எல்லை பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, நேற்று வீரமரணம் அடைந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜித்தேந்திர குமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குனர் அருண் குமார் இன்று பங்கேற்றார்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் நமது வீரர் குர்னாம் சிங் படுகாயம் அடைந்தது முதல் நமது எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் படையை சேர்ந்த 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என கூறினார்.

எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளவர்கள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் எல்லாவகை சவால்களையும் எதிர்கொள்ள நமது வீரர்கள் விழிப்புணர்வுடன் தயார்நிலையில் காத்திருக்கின்றனர் எனவும் அருண் குமார் தெரிவித்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...