500, 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் தாராளமாக புழங்குவதால் எச்சரிக்கை தேவை: ரிசர்வ் வங்கி அறிவுரை

500, 1000 ரூபாய் கள்ளநோட்டுகள் தாராளமாக புழங்குவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கள்ளநோட்டு புழக்கம் அதிகம் என்பதால் 500, 1000 போன்ற நோட்டுகளை கையாளும் போது கவனத்துடன் இருக்குமாறு மக்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். மக்களின் அவசர மனப்பான்மையை பயன்படுத்தி சமூக விரோத சக்திகள் கள்ளநோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் மும்பையில் தெரிவித்துள்ளனர்.

நல்ல நோட்டுகளில் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால் கள்ளநோட்டுகளை எளிதில் கண்டுகொள்ள முடியும் என்ற அவர்கள் தேவையானால் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இது குறித்த வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு முறை ரூபாய் நோட்டுகளை கையாளும் போது அவற்றை ஆராய வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏற்கனவே அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், மேலும் புதிய அம்சங்களை சேர்பது பற்றி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...