பரப்பன அக்ரஹாராவா, பட்டாசுடன் கொண்டாட்டமா... எதியூரப்பா மீதான லஞ்ச வழக்கில் இன்று தீர்ப்பு!

பெங்களூரு: முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீதான லஞ்ச வழக்கில் இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இது எதியூரப்பாவின் தலைவிதியை மாற்றி எழுதும் என்பதால் எதியூரப்பா ஆதரவாளர்களும், பாஜகவினரும் பெரும் பதைபதைப்புடன் உள்ளனர்.

கர்நாடக முதல்வராக எதியூரப்பா இருந்தபோது தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, தனது இரு மகன்கள், மருமகன் உள்ளிட்ட மேலும் சிலருக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்பது குற்றச்சாட்டாகும். இதுதொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, எதியூரப்பா, இரு மகன்கள், மருமகன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், பெல்லாரியைச் சேர்ந்த அதன் நான்கு துணை நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ.

குற்றச்சாட்டு - எதியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் ரூ. 20 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணமானது 2010ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதுபோக எதியூரப்பாவின் மகன்கள் நடத்தி வரும் பிரேர்னா கல்வி அறக்கட்டளைக்கும் ரூ. 20 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ. 40 கோடி பணமும், சுரங்க ஒப்பந்த அனுமதி தருவதற்காக எதியூரப்பாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்த லஞ்சப் பணமாகும்.

இந்தப் பணத்தை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் துணை நிறுவனமான செளத் வெஸ்ட் மைனிங் நிறுவனம் வழங்கியுள்ளது. இதுதவிர பெங்களூரு அருகே உள்ள ஒரு ஏக்கர் அரசு நிலத்தை எதியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கும் அவர்களது துணை நிறுவனங்களுக்கும் ரூ 20 கோடிக்கு விற்றதாக கணக்குக் காட்டியுள்ளனர். இது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் எதியூரப்பா குடும்பத்திற்குக் கொடுத்த லஞ்சத்தை மூடி மறைக்க நடந்ததாகும். உண்மையில் இந்த நிலப் பரிவர்த்தனை சட்டவிரோதமாக நடந்துள்ளது. எதியூரப்பா தனது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்புவெளியாகியுள்ளது. இதில் தண்டிக்கப்பட்டால் எதியூரப்பாவின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகும். ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போய் திரும்பிய எதியூரப்பா மீண்டும் சிறைக்குப் போவாரா அல்லது தப்புவாரா என்பது இன்றைய தீர்ப்பில் தெரியவரும்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...