மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி சுப்ரீம் கோர்ட்டில் தர்கா அறக்கட்டளை பதில்

‘‘மும்பை ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி அளிக்கப்படும்’’ என்று சுப்ரீம் கோர்ட்டில் தர்கா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மும்பை ஒர்லி பகுதியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தர்கா, மும்பை நகரின் முக்கிய அடையாள சின்னமாக திகழ்கிறது. இந்த தர்காவுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த பெண்களுக்கு கடந்த 2012–ம் ஆண்டு முதல் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் ஜாகியா சோமன் மற்றும் நூர்ஜகான் நியாஸ் ஆகிய இரண்டு பெண்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, ‘‘ஹாஜி அலி தர்காவிற்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் 14, 15, 19 மற்றும் 25 ஆகிய ஷரத்துகளுக்கு எதிரானது என்றும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதாக தர்கா அறக்கட்டளை விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு 6 வார காலம் இடைக்கால தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து, ஹாஜி அலி தர்கா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு
வந்தபோது, ‘‘இந்த விவகாரத்தில் முற்போக்குத்தனமான நிலைப்பாட்டை தர்கா அறக்கட்டளை எடுக்கும்’’ என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அதேநேரத்தில், தர்காவுக்குள் பெண்கள் நுழைவதற்கு ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூத், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தர்கா அறக்கட்டளை தனது முந்தைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டது. ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்களை அனுமதிக்க தர்கா அறக்கட்டளை ஆர்வத்துடன் இருப்பதாக தர்கா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆண்களுக்கு சமமாக பெண்களும் தர்காவுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று வாதிட்ட வக்கீல் கோபால் சுப்பிரமணியம், இதற்கு தேவையான உள்கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், 4 வார காலம் அவகாசம் அளிக்குமாறு கோரினார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தர்கா அறக்கட்டளைக்கு கால அவகாசம் அளித்தனர். அத்துடன் இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...