ஆந்திரா-ஒடிசா எல்லையில் நடந்த என்கவுண்டரில் 19 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

மால்கான்கிரி, ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் நடந்த என்கவுண்டரில் 19 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஆந்திர பிரதேசம் - ஒடிசா எல்லையில் இருமாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது மால்கான்கிரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவியில் இருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முகாம் மீது போலீஸ் படை தாக்குதல் நடத்தியது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கூட்டத்திற்கு கூடியிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் சுமார் 50-60 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கலந்துக் கொண்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று இரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் மூன்று ஏ.கே. 47 துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ரகத்தை சேர்ந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மால்கான்கிரி மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். 

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசாரும் காயம் அடைந்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...