தமிழ் மாணவர்கள் படுகொலை: யாழ் மாவட்ட செயலக முன்பு மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணத்திலுள்ள கொக்குவில் பகுதி போலீஸ் சோதனை சாவடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச்தைச் மாணவர்கள் இருவர், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முதலில், அந்த மாணவர்களை தாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என்றும், சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் உயிரிழந்தததாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனையின்போது, இரு மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதியானது.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தும்படி, அந்நாட்டு காவல்துறை தலைமை ஆய்வாளருக்கு அதிபர் சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச்தைச் மாணவர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செயலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களை உள்ளே செல்ல முடியாத அளவிற்கு வெளியே கண்டனப் போரட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...