ஒடிசா மருத்துவமனை தீ விபத்து எதிரொலி : சுகாதாரத்துறை அமைச்சர் நாயக் ராஜினாமா

ஒடிசாவில் பிரபல தனியார் மருத்துவமனையில் 25 பேர் உடல் கருகி பலியானதை அடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை நேரிட்ட தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நாயக்கை கண்டித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை முதலமைச்சர் நவீன்பட் நாயக்கிற்கு நாயக் அனுப்பியதாகவும், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ள பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. நாயக் தார்மீக அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் தீ விபத்து நிகழ்ந்த மருத்துவமனைக்கு தகுதியை மீறி அவரது மனைவி மூலம் நாயக் சலுகைகளை வழங்கியதே விபத்துக்கு காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் கல்வி நிறுவனம் ஒன்றில் நாயக்கின் மனைவி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...