பிரேசில் நிறுவனத்திடம் விமானம் வாங்கியதில் முறைகேடு: லண்டன் வாழ் இந்தியர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு


பிரேசில் நிறுவனத்திடம் விமானம் வாங்கியதில் முறைகேடு: லண்டன் வாழ் இந்தியர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

விமானம் வாங்குவதற்கு ஒப்பந்தம்


இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பிரேசில் நாட்டின் பிரபல விமான கம்பெனியான எம்பிராயரிடம் இருந்து 2008–ம் ஆண்டு 3 நவீன விமானங்களை வாங்கி அதில் அதிநவீன ரேடார் சாதனங்களை பொருத்தி ராணுவத்துக்கு பயன்படுத்த முடிவு செய்தது.

இதற்காக எம்பிராயர் நிறுவனத்துடன் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 208 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.1360 கோடி) ஒப்பந்தமும் செய்து கொண்டது. இந்த விமானங்களை பிரேசில் நிறுவனம் இந்தியாவிடம் 2011–ம் ஆண்டு முதல் படிப்படியாக 2013–ம் ஆண்டு இறுதிக்குள் ஒப்படைத்துவிட்டது.




ரூ.360 கோடி கமிஷன

இந்த விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் லண்டனில் வசிக்கும் இந்தியரான விபின் கன்னா (வயது 87) என்ற இடைத்தரகர் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக அவருக்கு ரூ.360 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா நடத்திய நீதி விசாரணையில் தெரிய வந்தது. இதுபற்றி பிரேசில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
சிங்கப்பூரில் உள்ள விபின் கன்னாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக அவருக்கு 2009–ல் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வழியாக பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சி.பி.ஐ. வழக்கு பதிவ


சி.பி.ஐ. கடந்த மாதம் இதுபற்றி பூர்வாங்க விசாரணை நடத்தியது. அதில் இடைத்தரகருக்கு கமிஷன் கொடுத்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லண்டனில் வசிக்கும் ஆயுத ஒப்பந்த இடைத்தரகரான விபின் கன்னா மீது சி.பி.ஐ. நேற்று வழக்கு பதிவு செய்தது.
இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, ‘‘இங்கிலாந்தில் வசிக்கும் இடைத்தரகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவருடைய பெயர் நாங்கள் விசாரித்து வரும் இன்னொரு ஆயுத ஒப்பந்தத்திலும் இடம்பெற்று உள்ளது’’ என்றனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...