ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவாளி கைது

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது மோர்ட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மண்ணுக்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாத முகாம்களின்மீது நமது ராணுவ வீரர்கள் நடத்திய ஆவேச தாக்குதலுக்கு பிறகு மட்டும் சுமார் 25 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளின்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், இந்திய பாதுகாப்பு படையினரின் நடமாட்டங்களை கண்காணித்து பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வந்ததாக இங்குள்ள ஜம்மு மாவட்டத்தில் உள்ள அர்னியா என்ற இடத்தை சேர்ந்த போத்ராஜ் என்பவரை சம்பா பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.

அவரிடமிருந்து பாதுகாப்பு படைகளின் நடமாட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் இரு சிம் கார்டுகளை கைப்பற்றி ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேலும் ஒரு உளவாளி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...