பிசிசிஐ கணக்கு வழக்குகளை லோதா கமிட்டி பராமரிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

டெல்லி: பிசிசிஐ கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்ள, லோதா கமிட்டியே ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல்வேறு முக்கிய பரிந்துரைகளை வழங்கியது. அதை அமல்படுத்த பிசிசிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது

இந்த உத்தரவை இன்னமும் பிசிசிஐ அமல்படுத்தாமல் இழுத்தடிக்கும் நிலையில் அதுகுறித்து லோதா கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதை விசாரித்துவரும் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாத பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒரு பைசாவை கூட தரக்கூடாது என்றும், பிசிசிஐ கணக்கு வழக்குகளை லோதா கமிட்டி ஆடிட்டர்களை நியமித்து கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மீடியாக்களுக்கு வழங்கப்படும் ஒபந்தம் உள்ளிட்ட பல்வேறு நிதி விவகாரங்களை லோதா கமிட்டியே இனி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...