காஷ்மீரில் மலைப் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து 22 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் ரியாசி என்னுமிடத்தில் முந்நூறடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் 22பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் இருந்து பாகல் நோக்கிச் சென்ற பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள முந்நூறடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 22பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...