32 லட்சம் ஏ.டி.எம். கார்டு தகவல்கள் திருட்டு

புதுடில்லி: இந்தியாவில் உள்ள 32 லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு தகவல்கள் திருடு போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் திருட்டு:

இதில் அதிகமாக எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எப்.சி, எஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏடிஎம் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஹிடாச்சியின் கம்ப்யூட்டர்களில் தான் முதலில் இந்த தகவல் திருட்டு மால்வேர் பரவியதாகவும், திருடப்பட்ட டெபிட் கார்டுகள் சீனாவில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

இதையடுத்து தகவல் திருடப்பட்டிருக்கும் ஏடிஎம் கார்டுகளை முடக்கும் நடவடிக்கையை வங்கிகள் மேற்கொண்டுள்ளன.

உடனடியாக பின் எண்ணை மாற்றும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றன. ஸ்டேட் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6.25 ஏடிஎம் கார்டுகளை முடக்கியுள்ளது. இதற்கு பதிலாக புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க உள்ளதாக கூறியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் பின் எண்ணை மாற்றுதல் உள்ளிட்ட சில அறிவுரைகளையும் கூறியுள்ளது.

நிதி அமைச்சகம் விசாரணை:

வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்த விபரங்களை அனைத்து வங்கிகளும் அளிக்க வேண்டும் என நிதித்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.

இதனை அடுத்து பல வங்கிகள் தங்கள் வங்கிகளில் எத்தனை வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்பது பற்றிய ஆய்வில் இறங்கி உள்ளன.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...