ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-சீன கூட்டு ராணுவப் பயிற்சி

புதுடில்லி: இந்திய-சீன கூட்டு ராணுவப் பயிற்சி ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்றது.

கூட்டு ராணுவப் பயிற்சி:

இதுகுறித்து இந்திய ராணுவம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா-சீனா இடையேயான முதலாவது கூட்டு ராணுவ பயிற்சி, கடந்த பிப்.,6ல் சீனாவின் கிழக்கு லடாக்கின் ஹட் பகுதியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்தியாவில், ஜம்மு-காஷ்மீரில் நேற்று கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றது.

இயற்கை பேரழிவுகளில்:

இதில் எல்லையோர கிராமங்களில் இயற்கை பேரழிவுகள் ஏற்படும்போது உதவிகள் செய்வதற்கு இரு நாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு இந்திய வீரர்களுக்கு பிரிகேடியர் ஆர்.எஸ்.ராமனும், சீனப் படைக்கு சீனியர் கர்னல் பன் ஜன்னும் தலைமை தாங்கினர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவில் விரிசல்:

அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர்வது, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவிப்பது உள்ளிட்ட விவகாரங்களில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இக்கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...