600கிலோ மீட்டர் தூரம் தாக்கும்: இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை!

புதுடில்லி: ரஷ்யாவுடன் இணைந்து 600 கி.மீ, தொலைவில் உள்ள இலக்கைக் கூட தாக்கக் கூடிய புதிய, 'பிரம்மோஸ்' ரக ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் பிரிக்ஸ் மாநாட்டில் கையெழுத்தானது.

ஏற்கனவே ரஷ்யாவுடன் இணைந்து, 300 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை அப்துல் கலாம் விஞ்ஞானியாக இருந்தபோதே இந்தியா தயாரித்து வருகிறது.

இந்நிலையில், எம்.டி.சி.ஆர்., எனப்படும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பிலும் இந்தியா இணைந்ததை யடுத்து 300 கி.மீ., துாரத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகளை தயாரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்பில் இணைந்ததன் மூலம், அமைப்பில் உள்ள நாடுகளுடன் நீண்ட துார ஏவுகணைகளை இணைந்து தயாரிப்பது, விற்பது, தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளும் உரிமை, நம் நாட்டுக்கு கிடைத்துஉள்ளது.

அதன்படி, எம்.டி.சி.ஆர். அமைப்பில் உள்ள ரஷ்யாவுடன் இணைந்து 600 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய பிரம்மோஸ் ரக ஏவுகணை தயாரிக்கப்பட உள்ளது.

இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகி உள்ளது. இந்த நவீன ஏவுகணை மூலம், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை, மிகத் துல்லியமாக தாக்க முடியும். ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் தரை மட்டமாக்க முடியும்.

கோவாவில் நடைபெற்று முடிந்த 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற் பதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வந்தபோது ரஷ்யாவுடன் 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் ராணுவ கொள்முதல் குறித்தும் குறித்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அப்போது, புதிய பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பது குறித்த ஒப்பந்த மும் கையெழுத்தானது;

இந்தியா - ரஷ்யாவுக்கான ஒப்பந்தங்கள் குறித்து, ரஷ்ய அதிபர் அங்குள்ள பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தபோது இந்த விஷயம் தெரிய வந்தது.

தரை, ஆகாயம், கடல் ஆகிய வற்றிலிருந்து செலுத்தும் வகையில், பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது' என, புடின் கூறினார்.

'பாலிஸ்டிக்' ஏவுகணைகள், ஏவப்பட்ட பின், இலக்கின் பாதி துாரம் வரை மிகவும் வேகமாகவும், அதன்பின், ஈர்ப்பு விசையினால் மீதி துாரமும் பயணம் செய்து இலக்கை தாக்கும்

'குரூயிஸ்' ஏவுகணைகள், பயண துாரம் முழுவதும், ஒரே சீரான வேகத்தில் பாய்ந்து செல்லும்

பிரம்மோஸ் ஏவுகணை, குரூயிஸ் ரகத்தை சேர்ந்தது. அதனால், கடைசி வரை இலக்கை நோக்கி, மிகவும் வேகமாக சென்று, மிகத் துல்லிய மாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, ஒரு ஆளில்லா போர் விமானம் போன்றது. கட்டுப்பாட்டு அறையில் இருந்தே, அதன் இலக்கை எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும்.

இடையில் எந்தத் தடை இருந்தாலும், தன் இலக்கை துல்லியமாக தாக்கும் எதிரியின், ஏவுகணை எதிர்ப்புகளையும் மீறி பயணிக்கும் திறன் உடையது நம்மிடம், 300 கி.மீ., துாரத்துக்கு மேற்பட்ட தொலைவுக்கு இயக்கக் கூடிய, பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இருப்பினும் முதல் முறையாக குரூயிஸ் ரக ஏவுகணை தயாரிக்கப் படஉள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய பாதுகாப்பு துறை நிபுணர்கள் கூறியதாவது:

புதிய ஏவுகணையை தயாரிப்பதில் மிகப் பெரிய பிரச்னை எதுவும் இல்லை. ஏற்கனவே, தயாரிக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ரக ஏவுகணைகளில், கூடுதல் தொலைவுக்கு இயக்கக் கூடிய தொழில் நுட்பதிறன் உள்ளது. அதனால், புதிய ஏவுகணை களை தயாரிப்பதற்கு நீண்ட காலமும் ஆகாது.

இந்த புதிய ஏவுகணை மூலம், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை தாக்கும் திறன், நம் ராணுவத்துக்கு கிடைக்கும். விமானப்படை , கடற்படையில் பயன்படுத்தக் கூடிய வகையிலும், இந்த ஏவுகணை தயாரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகளண நம் நாட்டுக்கு மிகப் பெரிய பலம்.

மலைப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி யிருந்தாலும், அந்த இலக்கை சரியாகவும், மிகவும் துல்லியமாகவும் தாக்கக் கூடியதாக பிரம்மோஸ் புதிய ஏவுகணை இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...