மறு உத்தரவு வரும் வரை தமிழகத்துக்கு 2000 கனஅடி திறக்க வேண்டும்: காவிரிநீர் பிரச்னையில் கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அடுத்த உத்தரவு வரும்வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய், ஏ.எம்.கன்விகார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தஹி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை நீதிபதிகள் முன் தாக்கல் செய்தார். அவர் வாதிடும்போது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தொடர்ந்த வழக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 131 மற்றும் 262 ஆகியவற்றின் படியும் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தாவா சட்டத்தின் கீழும் விசாரணைக்கு உகந்ததல்ல. தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியிருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பைப்போலாகும். 

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதை உச்ச நீதிமன்றமே விசாரிக்க முடியாது என்று வாதிட்டார். அப்போது, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன் வாதிடும்போது, இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னை என்பதால் எங்கள் மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றதுதான். கர்நாடகத்தில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு மேல் தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதிடும்போது, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு 64 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், கர்நாடக அரசு குறைவாகவே தண்ணீர் திறந்துள்ளது. தமிழகத்தில் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்துவிடுமாறு உத்தரவிட வேண்டும் என்றார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இரு மாநிலங்களும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். மாநிலங்களின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அந்தந்த மாநிலங்களின் கடமை. எனவே, மறு உத்தரவு வரும்வரை தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரை கர்நாடக மாநிலம் திறந்துவிட வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முதலில் விசாரித்த பின்னர், உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை குறித்து விசாரிக்கப்படும். இந்த வழக்கு புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

  • தமிழகத்தில் 1.7 கோடி மக்கள் காவிரி நீரை பயன்படுத்தி வருகிறார்கள்.
  • சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ஆண்டுக்கு சுமார் 20 டிஎம்சி தண்ணீர் குடிநீருக்காக பயப்படுத்தப்பட்டு வருகிறது.
  • காவிரி ஆற்றுப்படுகையை மையமாக கொண்டு 127 குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.


கர்நாடகா உடனடி திறப்பு

கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு தினமும் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துள்ளோம். இதனால், மாநிலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த விஷயத்தில் விவசாயிகள், பொதுமக்கள் யாரும் கவலையடைய வேண்டாம். காவிரி விஷயத்தில் நமக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்றார். பாதுகாப்பு கமிட்டி தலைவரும் முன்னாள் எம்.பியுமான ஜி.மாதேகவுடா கூறுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்டால், பெரியளவில் பாதிப்பு ஏற்படும். ஆகவே மாநில அரசு தண்ணீர் திறந்துள்ளதை யாரும் எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டாம் என்றார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...