ஒடிசா மருத்துவமனையில் தீயில் கருகி 23 பேர் பலி

புதுடெல்லி: புவனேஸ்வரில் சம் தனியார் மருத்துவமனை 4 அடுக்கு மாடியில் இயங்கி வருகிறது. மருத்துவமனை டயாலிசிஸ் பிரிவின் முதல் மாடியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நேற்று மாலை அங்கு திடீரென தீ பரவியது. டயாலிசிஸ் பிரிவுக்கு அடுத்து இருந்த அவசர சிகிச்சை பிரிவிலும் சில நிமிடங்களில் மளமளவென பரவிய தீயினால், ஏற்பட்ட கரும்புகை மற்றும் வெப்பத்தில் நோயாளிகள் சிக்கினர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று, தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டனர். அப்போது, தீயில் கருகிய நிலையில் 9 சடலங்களை மீட்புப்படையினர் மீட்டனர்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் பினோத் குமார் மிஸ்ரா கூறுகையில், ''5 பேரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளோம்.

பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்'', என்றார். இதனிடையே, சம் மருத்துவமனையில் இருந்து 37 பேர் தீக்காயங்களுடன் இங்கு சேர்க்கப்பட்டுள்ளனர் என அம்ரி மருத்துவமனை டாக்டர் சலீல் குமார் மொஹந்தி தெரிவித்தார். மேலும், 8 பேர் மருத்துவமனை வரும்போது இறந்து காணப்பட்டனர் என அவர் கூறினார். 

போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொது மக்கள், தன்னார்வலர்கள் என பலரது ஆதரவுடன் 500 நோயாளிகளை நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தோம் என காவல் துறை கமிஷனர் தெரிவித்தார். கண்ணாடி ஜன்னலை உடைத்து நோயாளிகளில் பெரும்பாலானோரை மீட்டதாக கமிஷனர் கூறினார். இறுதி நேர நிலவரப்படி பலி எண்ணிக்கை 23 என கூறப்பட்டு உள்ளது. பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...