பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ராணுவம் நாளை விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் (சர்ஜிகல் அட்டாக்) நடத்தியது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் வெளியுறவுத் துறைச் செயலரும், இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரலும் வரும் 18-ஆம் தேதி விளக்கம் அளிக்கவுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள இந்திய ராணுவ படைப்பிரிவு முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் பலியாகினர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதே மாதம் 29-ஆம் தேதி புகுந்து இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலில் பயங்கரவாதிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று அந்நாட்டு ராணுவம் மறுத்து வருகிறது. இதேபோல், இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் சந்தேகம் எழுப்பின. குறிப்பாக, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், துல்லியத் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை தரகு வேலை செய்வதாக புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, பாஜக எம்.பி. பி.சி. கந்தூரி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவிடம் ராணுவ துணைத் தளபதி பிபின் ராவத் ஆஜராகி, துல்லியத் தாக்குதல் குறித்து விளக்கினார்.

இந்நிலையில், தில்லியில் வரும் 18-ஆம் தேதி கூடவிருக்கும் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்னிலையில், வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளனர்.
இதுகுறித்து மக்களவைச் செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தில்லியில் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையில் வரும் 18-ஆம் தேதி கூடுகிறது. இதில் வெளியுறவுத் துறைச் செயலர், மத்திய உள்துறைச் செயலர், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் ஆகியோர் நேரில் ஆஜராகி, துல்லியத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் உறவு குறித்து விளக்கம் அளிக்கவுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...