காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம்: இந்திய நிலைகள் மீது பாக். ராணுவம் குண்டு வீச்சு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் சர்ஜிக்கல் அட்டாக் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தனர். 

இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில்  à®‡à®¨à¯à®¤ சூழலில் உரி தாக்குதலுக்கு பின்னர் தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகளை குறிவைத்து கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் 20ம் தேதியும் 28ம் தேதியும் பூஞ்ச் பகுதியில் அத்துமீறி இந்திய நிலைகளை நோக்கி சிறிய ரக குண்டுகளை வீசி தாக்கினர். இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும் அக்னூர் மாவட்டத்தில் உள்ள பல்லன்வாலா, சப்ரியர், சம்னம் ஆகிய பகுதிகளில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலும் இந்திய நிலைகள் மீது பாக். படைகள் தாக்குதல் நடத்தின. 

அதே போல் இந்த மாத தொடக்கத்தில் பூஞ்ச் மாவட்டத்திலும் இந்திய நிலைகள் மீதும், எல்லையோர கிராம குடியிருப்புகளை நோக்கியும் தாக்கினர். இந்த மாத தொடக்கத்தில் 10 நாட்களில் மட்டும் 25 முறை பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியுள்ளது. இதனால் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வரும் வேளையில், இன்று அதிகாலை ஜம்மு எல்லையில் உள்ள நவுசரா செக்டாரில் நான்கு இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தினர் மோட்டார் ரக குண்டுகளை பயன்படுத்தி தாக்கினர். இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் இந்திய தரப்பில் யாருக்கும் எந்த சேதமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...