காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்வு

காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல்  à®®à¯à®œà®¾à®•ீதின் பயங்கரவாத இயக்க தளபதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு கடும் வன்முறை வெடித்தது. பிரிவினைவாதிகளும் முழு அடைப்பு மற்றும் வன்முறையை தூண்டி விட்டதால் பாதுகாப்பு படையினர் இடையே போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில், அங்கு தற்போது நிலமை முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் ஒன்றாக கூடுவதற்கு தடை இன்னும் நீடிக்கிறது.  

பதட்டமான பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரிப்பெய்டு மொபைல் போன்களில் அவுட் கோயிங் அழைப்புகளுக்கு இருந்த தடையும் விலக்கி கொள்ளப்பட்டது. மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  à®‡à®°à¯à®ªà¯à®ªà®¿à®©à¯à®®à¯, செல்போன் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. 

இருந்த போதிலும், 99 வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியே உள்ளது.  à®•ாஷ்மீரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஜாமியா மஸ்ஜித் மசூதி 14 வாரங்களாக மூடப்பட்டுள்ளது. மசூதிக்கு செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  à®•ாஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...