ராணுவம் பேசாது; வீரத்தை காட்டும்: பிரதமர் மோடி புகழாரம்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போர் நினைவிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘ராணுவம் பேசாது; வீரத்தை செயலில் காட்டும்’ என்று புகழ்ந்து பேசியதுடன், ‘தேசம், எல்லைகளை கடந்த பல மனித உயிர்களை காப்பாற்றியவர்கள் நமது ராணுவ வீரர்கள்’ என பாராட்டினார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நினைவிடம் 41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதில் முன்னாள் ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர். சமீபத்தில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கேட்டு எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை கிளப்பின. அதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி, தனது பேச்சை தொடங்கினார். அவர், பேசியதாவது: நமது ராணுவம் எப்போதும் பேசுவதில்லை. தனது வீரத்தை செயலில் தான் காட்டுகிறது. அதைத்தான் நமது பாதுகாப்பு அமைச்சரும் செய்கிறார். நாம், ராணுவ வீரர்களைப் பற்றி பேசும் போது, அவர்களின் சீருடை, வீரத்தை பற்றிதான் பெரும்பாலும் குறிப்பிடுகிறோம். அதையும் தாண்டி, மனிதநேயத்தின் உதாரணமாக அவர்களை நாம் பார்க்க வேண்டும்.

ஐநா அமைதிப்படையில் மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது ராணுவம், எல்லை, தேசத்தை தாண்டி பல மனித உயிர்களை காப்பாற்றி உள்ளது. ஏமன் உள்நாட்டு போரில், பொதுமக்களை மீட்பதில் ராணுவம் முக்கிய பங்காற்றியது. அப்போது இந்தியர்களை மட்டுமின்றி சில பாகிஸ்தான் மக்களைக் கூட நமது ராணுவம் காப்பாற்றி வந்துள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ராணுவம் ஈடுபட்டு பல உயிர்களை காப்பாற்றியது. காஷ்மீரில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நமது ராணுவத்தினர், அங்குள்ள சில மக்கள் நம் மீது கல்வீசியவர்களாயிற்றே என ஒருபோதும் நினைக்காமல் பலரை காப்பாற்றி உள்ளனர். இப்படி, எல்லையை காப்பது மட்டுமின்றி பேரிடர் சமயத்திலும் அவர்கள் நம் உயிரை காப்பாற்றியுள்ளனர் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே பென்ஷன் திட்டத்தில், முந்தைய அரசுகள் பொய்யான பல வாக்குறுதிகளை அளித்தன. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ராணுவ வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக இந்த அரசு பெருமை கொள்கிறது.

எல்லையில் உயிரை பணயம் வைத்து, இரவு பகலாக அவர்கள் பாதுகாப்பதால் தான் நம்மால் இங்கு இரவில் நிம்மதியாக உறங்க முடிகிறது. சில நாடுகளில் ராணுவ வீரர்களை விமான நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ பார்க்கும் போது, மக்கள் எழுந்து நின்று, கைதட்டி அவர்களுக்கு மரியாதை செய்கின்றனர். அதை நாமும் கடைபிடிப்போம்.இவ்வாறு மோடி பேசினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...