நாளை துவங்குகிறது பிரிக்ஸ் மாநாடு: பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம்

பனாஜி: பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு கோவாவில் நாளை துவங்க உள்ள நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்ரிக்கா, இந்தியா ஆகிய உறுப்பு நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, நாளையும் நாளை மறுநாளும் கோவாவில் நடைபெற உள்ளது.  இதில் 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். உரி தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதனை தொடர்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறகணித்ததால் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.

சர்வதேச நாடுகளின் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையின் ஒருகட்டத்தை இந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பாரக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. மேலும் கூடங்குளம் 3 மற்றம் 4-வது அணுஉலை திட்டமும் துவங்கப்பட உள்ளது.

மேலும் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இதை தவிர சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்தவும் இந்த மாநாட்டை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன,

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...