எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதில் குறிப்பாக எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு பலமடங்கு உயர்ந்து இருப்பதால் அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. இதனால் செலவு அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த எத்தனாலை பெட்ரோலில் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 

எனவே, எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோலில் சேர்க்கப்படும் எத்தனாலின் விலையை, சந்தைக்கு ஏற்ப மாற்றியமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், சந்தையில் சர்க்கரையின் விலைக்கு ஏற்ப, எத்தனால் விலையும் மாற்றி அமைக்கப்படும். தற்போது ஏற்பட்டுள்ள மாற்றப்படி, எத்தனால் விலை, லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைந்து, 39 ரூபாயாக உள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...