குஜராத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் இருவர் கைது : ராணுவ நடவடிக்கைகளை நோட்டமிட்டதாக விசாரணயில் தகவல்

காவ்தா: பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ உளவாளிகள் 2 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள காவ்தா நகரில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது முகமது அலானா மற்றும் சஃபூர் சுமாரா ஆகிய இரண்டு பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பாகி்ஸ்தான் நாட்டின் சிம் கார்டுடன் கூடிய செல்போன்களை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை அவர்கள் கண்காணித்து வந்தது தெரிய வந்துள்ளது.

ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து பாகிஸ்தானில் உள்ள தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்ததாக அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பயங்கரவாதிகள், அதற்காக சுமார் 250 பேரை ஊடுருவவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், I.S.I உளவாளிகள் இரண்டு பேர் குஜராத்தில் பிடிப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...