வாடிக்கையாளருக்கு சேவை வழங்க ஏடிஎம்மில் வங்கி ஊழியர்கள் நியமிக்க ரிசர்வ் வங்கி யோசனை

மும்பை: ஏடிஎம் பயன்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி சர்வே எடுத்துள்ளது. இதில், ஆசியாவில் இந்தியர்கள்தான் மிக அதிக அளவில் ஏடிஎம் பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது. மொபைல் பேங்கிங் பயன்படுத்துதிலும் இந்தியர்கள்தான் முதலிடம். சர்வே எடுத்ததில் பாதிப்பேர், வாரத்தி்ல் ஒரு முறையாவது ஏடிஎம் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இந்த பயன்பாடு 26 சதவீதமாகவும், சீனாவில் 44 சதவீதமாகவும் உள்ளது. 

இதுபோல் மொபைல் பேங்கிங் பயன்பாடு கடந்த மூன்று ஆண்டுகளில் 11 மடங்கு உயர்ந்துள்ளது. 2013ம் ஆண்டு ஆகஸ்டில் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனை எண்ணிக்கை 63 லட்சமாக இருந்தது, கடந்த ஆகஸ்டில் சுமார் 7 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியர்கள் ஏடிஎம் மட்டுமின்றி வங்கி கிளைக்கு செல்வதிலும் அதிக அளவில் உள்ளனர். எனவே இந்தியாவில் ஏடிஎம்க்கு எப்போதுமே தேவை உள்ளது. கடந்த ஜூலையில் 75 கோடி ஏடிஎம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே மாதத்தில் 6.5 கோடி மொபைல் வங்கி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. தற்போது ஏடிஎம் இயந்திரத்துக்கு ஒரு காவலாளி மட்டும் நியமிக்கப்படுகிறார். இத்துடன் கூடுதலாக ஒரு வங்கி ஊழியர் அல்லது வங்கி சேவைக்கான ஒரு நபர் தனியாக நியமிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. இதன்மூலம், வங்கி கிளையில் பெறக்கூடிய கூடுதல் சேவைகளை ஏடிஎம் மூலாமாகவே பெறவும், வங்கி வர்த்தகத்தை விரிவு படுத்தவும் இது உதவும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...