பாம்போர் என்கவுண்டர் 3-வது நாளை எட்டியது, 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை, துப்பாக்கி சண்டை தொடர்கிறது

ஸ்ரீநகர்,

பாம்போரின் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையானது 3-வது நாளை எட்டியது. இதுவரையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு பயங்கரவாதி கட்டிடத்திற்குள் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பாம்போர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக கட்டிடம் உள்ளது.  à®‡à®¨à¯à®¤ கட்டிடத்திற்குள் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் புகுந்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ், பாதுகாப்பு படையின் கவனத்தை கவர்வதற்காக அவர்கள் அங்குள்ள விடுதியின் மெத்தைகளை தீயிட்டு கொளுத்தினர். அதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்தனர். சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். 

பயங்கரவாதிகளை அழிக்க பாதுகாப்பு படையினர் சிறிய மோட்டார் துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தினர். ஆனால் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அங்கு 2–வது நாளாக துப்பாக்கி சண்டை நீடித்தது. ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். இன்னும் அந்த கட்டிடத்துக்குள் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இருள் காரணமாக சண்டை நேற்றிரவு நிறுத்தப்பட்டாலும், இன்று (புதன்கிழமை) 3–வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. இன்று மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 

இன்னும் ஒரு பயங்கரவாதி கட்டிடத்திற்குள் மறைந்து இருக்கலாம் என்று ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. இருதரப்பு சண்டையானது தொடர்ந்து நீடித்து வருகிறது, பாதுகாப்பு படையினர் கட்டிடத்தின் ஒருபகுதிக்குள் நுழைந்துவிட்டனர், அவர்கள் ஒவ்வொரு அடியையும் பத்திரமாக எடுத்து வைத்து எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 52 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் சண்டையில் அரசு கட்டிடம் பெரிதும் சேதம் அடைந்து உள்ளது. கட்டிடம் எழும்பு கூடாக காட்சி அளிக்கிறது. கட்டிடம் தீ பிடித்து எரிந்தும், சுவர்கள் சரிந்தும் புகைமூட்டமாக காணப்படுகிறது.



கூடுதல் பாதுகாப்பு படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

கடந்த பிப்ரவரி மாதமும் இக்கட்டிடம் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கானது. இத்தாக்குதலில் இரு ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 48 மணி நேரம் நீடித்த சண்டையில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...