கண்ணாடி கூரைகளால் ஆன புதிய ரயிலை இந்த மாதம் அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே

புதுடெல்லி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இந்திய ரயில்வே முதன் முதலில் இந்த மாதம் முதல் கண்ணாடி கூரைகளால் ஆன ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையிலான மேலும் மூன்று ரயில்களை டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சியின் நிர்வாக இயக்குநர் ஏ.கே. மனோச்சா கூறியதாவது: - புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள கண்ணாடி கூரைகளால் ஆன இந்த ரயில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளையும் கவரும். இந்த திட்டம் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கண்ணாடி மேற்கூரை ரயில்களை வடிவமைக்கும் பணியில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஈடுபட்டது.
ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு பணிகள் தமிழ்நாடு சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டிகள் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் நடந்து வருகிறது.

ஏரியல் காட்சி, சுழற் நாற்காலிகள் கொண்ட ஒவ்வொரு கோச்சின் மத்திப்பு 4 கோடி ரூபாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகளில் இயக்கபடும் ரயில்கள் போல் இதுவும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும்.

இதனால் ரயில் பணிகளின் போக்குவரத்து அதிகரிக்கும் என்று நம்புவதாகவும், தற்போதுள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில் பணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டங்கள் நிறைய வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...