காஷ்மீரில் கையெறி குண்டுவீச்சு: 8 பேர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் பாம்போர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக கட்டடத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கையெறி குண்டுகளும் இந்த கட்டடத்தில் வெடித்தது. இதனால் அங்கு தீப்பிடித்தது. ஜெலும் நதி மூலம் படகை பயன்படுத்தி கட்டடத்திற்குள் புகுந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீசார் கான்வாயை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்தியாவின் சர்ஜிக்கல் தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...