கர்நாடக அணைகளில் 2வது நாளாக ஆய்வு

பெங்களூரு : கர்நாடக அணைகளை காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு 2-வது நாளாக இன்று ஆய்வு செய்கிறது. ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாண்டியா மாவட்டம் சென்ற நிபுணர் குழுவினர், ஹம்ரஅல்லி மற்றும் தைலுரு ஏரிகளை ஆய்வு செய்தனர். ஆணைத்தொட்டி, ஆவேரிப்பள்ளி கிராமங்கள் மற்றும் மாலவல்லி தாலுக்காவில் காவிரி நீர் பாசனப்பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்நிலையில் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளை அந்த குழு இன்று ஆய்வு செய்கிறது. தொழில்நுட்ப குழுவினர் இன்று இரவு மேட்டூர் வருகின்றனர். மேட்டூர் அணை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளை அவர்கள் நாளை ஆய்வு செய்யலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப குழு, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, நீர் திறப்பது மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றை நாளை ஆய்வு செய்ய உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி பாசனப்பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வளத்துறை ஆணையர் ஜி. எஸ். ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை வரும் 17-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட உள்ளது.  

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...