பம்மியது! சர்வதேச நாடுகள் கண்டனத்தால் பாக்., 'அடக்கி வாசிக்கும்படி' ராணுவத்துக்கு உத்தரவு


இஸ்லாமாபாத்: ''பயங்கரவாதத்துக்கு அரணாக செயல்படுவதை நிறுத்தாவிட்டால், உலகின் மற்ற நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுவோம்,'' என, பாகிஸ்தான் ராணுவத்தை, அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த, பயங்கரவாத முகாம்களை, இந்திய ராணுவம் அதிரடியாக தாக்கி அழித்தது. 

இதற்கிடையில், பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை, சர்வதேச நாடுகளில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியையும் மத்திய அரசு மேற்கொண்டுள் ளது. இதற்கான முதல் வெற்றியாக, பாகிஸ் தானில் நடக்கவிருந்த, 'சார்க்' மாநாடு, ஒத்தி வைக்கப்பட்டது. 

பாக்.,கின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடு களை, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் கண்டித்துள்ளன. இதனால், சர்வதேச நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படு வோமோ என்ற பீதி, பாகிஸ்தான் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமா பாத்தில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வரும், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரருமான ஷாபாஸ் ஷெரீப், ஐ.எஸ்.ஐ., புலனாய்வு அமைப்பின் அதிகாரி இடையே காரசாரமான வாக்கு வாதம் நடந்தது. 

அதன் எதிரொலியாக, இரண்டு முக்கிய முடிவுகளை, நவாஸ் ஷெரீப் எடுத்துள்ளார். முதலாவதாக, தடை செய்யப்பட்ட பயங்கர வாத அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் போது, அதில் புலனாய்வு அமைப்புகள் தலையிடக் கூடாது. இந்த தகவலை, ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள், பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு மாகாணமாக சென்று, அங்குள்ள புலனாய்வு அமைப் பின் கீழ்நிலை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். 

இரண்டாவதாக, பதான் கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நிறுத்திவைக்கப்பட்ட, மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையை மீண்டும் துவங்க வேண்டும். இந்த இரண்டு முடிவுகளும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன. 

கூட்டத்தின் முடிவில், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசுகையில், 'பயங்கரவாத அமைப்பு களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தவேண்டும்; சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரித்துள்ளது. 

இந்த விஷயத்தில் ராணுவம் உறுதியாக செயல்பட வேண்டும்; இல்லையெனில், சர்வதேச நாடுகளில் இருந்து, நாம் தனிமைப்படுத்தப்படு வோம்' என்றார். 

பாகிஸ்தானில் இருந்து வெளியாகும், 'டான்' பத்திரிகை, இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சர்வ தேச அளவில் எழுந்த நெருக்கடியே, பாக்., பிரதமரின் மன மாற்றத்துக்கு காரணம் என கூறப் படுகிறது.

3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டம், லான்கேட் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே, நேற்று அதிகாலை, மூன்று பேரின் நடமாட்டத்தை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ராணுவ முகாம் மீது அந்த பயங்கர வாதிகள் துப்பாக்கியால் சுடத் துவங்கினர். உடன், ராணுவத்தினர் எதிர் தாக்குதலை நடத்தி, மூன்று பயங்கரவாதிகளையும் வீழ்த்தினர். 

அவர்களிடமிருந்து, ஆயுதங்களும், மருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் பாகிஸ்தான் முத்திரை à®‡à®°à¯à®ªà¯à®ªà®¤à¯à®®à¯ உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட்டம்

'பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதி களின் முகாம்களை அழிக்க வேண்டும்' என வலி யுறுத்தி, அங்குள்ள மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்; இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

'இந்த முகாம்கள், எங்கள் வாழ்க்கையை, நரக மாக்கி விட்டன; இதற்குமேலும் பொறுக்க முடியாதுபாக்., ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளை விரட்ட வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். 

பயங்கரவாதிகளுக்கு எதிராக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களே களமிறங்கி இருப்பது, பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஊடுருவல் முறியடிப்பு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, நுகாம், ராம்பூர் பகுதி களில், பாகிஸ்தான் ராணுவ உதவியுடன், பயங்கரவாதிகள் நேற்று ஊருடுவ முயன்றனர். இந்திய வீரர்கள், தாக்குதல் நடத்தி, அவர்களை விரட்டியடித்தனர். இதில், நான்கு பயங்கரவாதி கொல்லப்பட்டனர்.

நம் ராணுவ வீரர்களின் செயல்பாட்டில், இது வரை யாரும் சந்தேகப்பட்டது கிடையாது. வரலாற்றில் முதல் முறையாக, சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்; இது, நம் வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயல். ராணுவ வீரர்களின் செயல்பாட்டை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

மனோகர் பரீக்கர், ராணுவ அமைச்சர், பா.ஜ.,




பின்னணி என்ன?

பாக்., பிரதமரிடம், அந்த நாட்டு வெளியுறவு செயலர் அஜீஸ் சவுத்ரி, சர்வதேச அரசியல் நிலைமையை விளக்கியதாக தெரிகிறது. 

அப்போது, 'பாக்.,கில் செயல்படும் ஹக்கானி பயங்கரவாத குழுவை அழிக்க வேண்டும்' என, அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும்; இதை செய்யாவிட்டால், அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பதன்கோட் தாக்குதலுக்கு காரணமான, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, இந்தியா தரப்பில் எழுந்துள்ள அழுத்தம் குறித்தும், பாக்., பிரதமரிடம், அவர் விளக்கியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிராக, சர்வதேச நாடுகள் ஓரணியில் இணையும் நேரத்தில், எந்தவித ஆபத்தான நிலையையும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், பதறிப் போன à®ªà®¿à®°à®¤à®®à®°à¯ நவாஸ் ஷெரிப், ராணுவத்தின் தலையீடுகளை நிறுத்திக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...