ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு விற்பனை: பிலிப்கார்ட் சாதனை

புதுடில்லி: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிலிப்கார்ட், பண்டிகை காலத்தை முன்னிட்டு "பிக் பில்லியன் டே" விற்பனையை அக்டோபர் 3ம் தேதி நடத்தியது. இதில் ஒரே நாளில் ரூ.1400 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒரே நாளில் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிகமானவர்கள் ஆர்டர் செய்ததன் காரணமாக இந்த அளவிற்கு விற்பனை அதிகரித்ததாகவும், 2015ம் ஆண்டு 5 நாட்களில் ரூ.2000 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் பிலிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல புதிய வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கியதன் காரணமாக இந்த வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக பிலிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பின்னி பன்சால் தெரிவித்துள்ளார்.

அதிக வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் புக் செய்தாலும் டிராபிக், லோடிங் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பிலிப்கார்ட் நிறுவனம் முன்னேற்பாடுகளை செய்திருந்தது. இதனால் எந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் எட்ட முடியாத விற்பனை சாதனையை பிலிப்கார்ட் நிகழ்த்தி உள்ளதாக அதன் தலைவர் அரவிந்த் சிங்கால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இனி வரும் காலங்களில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டிகை கால சலுகை அறிவிக்கப்பட்ட பிறகு பிலிப்கார்ட்டில் 40 மில்லியன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு பண்டிகை கால விற்பனையில் 80 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை விற்பனை செய்து 3 மடங்கு அதிகமாக விற்பனை சாதனையை அமேசான் நிறுவனம் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...