காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு செப்டம்பர் 30-ம் தேதி தான் பிறப்பித்த உத்தரவை, மத்திய அரசின் வாதத்தை அடுத்து, நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு, மத்திய அரசின் வழக்கறிஞரும் ஒப்புதல் தெரிவித்தார். இந்த நிலையில், மத்திய அரசு சார்பில் அக்டோபர் 3-ம் தேதி தாக்கல் செய்த மனுவில், மேலாண்மை வாரியம் அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்ற வரம்புக்கு உட்பட்டது என்றும், உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தது. மேலும், ஏற்கெனவே இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணையில் உள்ள நிலையில், இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் வாதத்தில் ஓரளவு நியாயம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், மேலாண்மை வாரியம் அமைக்க தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும், ஆனால் ரத்து செய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.

அடுத்த விசாரணை, அக்டோபர் 18-ம் தேதி, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு நடைபெறும் எனறும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக, மத்திய அரசு தொழில்நுட்ப நிபுணர் குழுவைக் கொண்டு இரு மாநிலங்களிலும் கள ஆய்வு நடத்தி, 17-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், 6-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் ஒப்புக்கொண்ட நிலையில், 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தினசரி 2 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...