மேகி நூடுல்சை அழிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: தேக்கி வைக்கப்பட்ட, 550 டன் நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்க, நெஸ்லே நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிகளவு காரீயம்:

நெஸ்லே இந்தியா நிறுவன தயாரிப்பான மேகி நுாடுல்சில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காரீயம் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் அனைத்து வகை மேகி நுாடுல்ஸ் பாக்கெட்டுகளின் மாதிரிகளை சேகரித்து பரிசோதிக்க, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டது.

விற்பனைக்கு தடை:

பரிசோதனையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகளவில் கலந்திருப்பது உறுதியானதால், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள நெஸ்லே நிறுவன கிட்டங்கிகளில், 550 டன் மேகி நுாடுல்ஸ் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

அழிக்க உத்தரவு:

தற்போது, இந்த நுாடுல்ஸ் பாக்கெட்டுகளை அழிக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, 38 ஆயிரம் டன் நுாடுல்ஸ் பாக்கெட்டு கள், சிமென்ட் உற்பத்தி தொழிற்சாலையில் எரிபொருளாக பயன்படுத்தி அழிக்கப்பட்டதாக, நெஸ்லே நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...