இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு

புதுடில்லி: யூரி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாக்., எல்லைக்குள் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியா அதிரடி: யூரியில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையினர் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்தியாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

ரஷ்யா துணை நிற்கும்: இதுகுறித்து டில்லியில் அளித்த பேட்டியில் ரஷ்யத் தூதர் அலெக்ஸாண்டர் கடாகின் தெரிவித்ததாவது: இந்தியாவில் உள்ள ராணுவ முகாம்கள், அப்பாவி பொதுமக்கள் ஆகியோரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்சூழலில், பாக்.,கில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையை ரஷ்யா வரவேற்கிறது. எந்தவொரு நாட்டுக்கும் தன் குடிமக்களை பாதுகாக்கும் உரிமை உண்டு. அதன்படியே, இந்தியாவின் ராணுவ நடவடிக்கையும் அமைந்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா துணை நிற்கும். பாக்.,- ரஷ்யாவின் கூட்டு ராணுவப் பயிற்சி குறித்து இந்தியா கவலை அடைய வேண்டாம். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இக்கூட்டுப் பயிற்சி நடைபெறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...