காவிரி பிரச்னையை தீர்க்க உமாபாரதி உண்ணாவிரதம்

புதுடில்லி: கர்நாடகா - தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இருப்பினும் இரு மாநிலங்களுடன் மத்திய அரசு நடத்திய இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் காவிரி பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் உமா பாரதி, காவிரி பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படுவதற்காகவும், இரு மாநிலங்களுக்கு இடையேயான பதற்றத்தை தணிப்பதற்காகவும் தேவைப்பட்டால் இருமாநில எல்லையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன். இரு மாநிலங்களுக்கு இடையே ஏதாவது மோதல் என தகவல் வந்தால், அமைதியை ஏற்படுத்த உண்ணா விரதம் இருப்பேன் என்றார். மேலும், இரு மாநிலங்களும் அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளன.

இதனை இந்திய அட்டர்னி ஜெனரல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது வழியிலோ காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் எங்களை அணுகலாம். அவர்களுக்காக மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என உமாபாரதி தெரிவித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...