இந்தியா - பாகிஸ்தான், விமான போக்குவரத்து நிறுத்தம்?

புதுடில்லி: யூரி தாக்குதல், சிந்து நதி ஒப்பந்த விவகாரம் ஆகியவற்றிற்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நேரடி விமான போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தான், எல்லைக்குள் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளிடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளிடையே இயக்கப்படும் விமான போக்குவரத்து தொடர்பான விபரங்களை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு தடை விதிக்கலாம் அல்லது தாழ்வாக பறக்க அனுமதி வழங்கலாமா என்பது குறித்து விமான போக்குவரத்து துறையிடம், பிரதமர் அலுவலகம் கருத்து கேட்டுள்ளது. விமான போக்குவரத்து துறையும் அனைத்து விபரங்களை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது.

பாகிஸ்தான், விமானங்களுக்கு அனுமதி அளிக்கலாமா அல்லது தடை விதிக்கலாமா என்பது குறித்த இறுதி முடிவை பிரதமர் அலுவலகம் தான் எடுக்கும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் 2001ம் ஆண்டு, இந்திய பார்லி., கட்டிடம் மீதான தாக்குதலின் போது இரு நாடுகளிடையே விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...