தமிழகத்தின் ரேஷன் அரிசி கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.22.54 ஆக உயர்வு

உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தாத தமிழகத்துக்கு ரேஷன் அரிசிக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கான முடிவு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.அதன்படி, ரேஷனில் வழங்கப்படும் அரிசியை தமிழக அரசுகுறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு கிலோ 22 ரூபாய் 54 காசுக்கு கொள்முதல் செய்ய நேரிடும். இதுவரை ஒரு கிலோ அரிசியை 8 ரூபாய் 30 காசுக்கு தமிழக அரசு கொள்முதல் செய்து ரேஷனில் இலவசமாக வழங்கி வருகிறது. அதேபோல, 6 ரூபாய் 10 காசுக்கு வாங்கப்பட்டு வந்த ரேஷன் கோதுமைக்கும் தமிழகம் இனி ஒரு கிலோவுக்கு 15 ரூபாய் 25 காசு கொள்முதல் விலையாக தர வேண்டியிருக்கும்.

கடந்த 2013ம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதை 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்தின. தமிழகம் மற்றும் கேரளா மட்டுமே உணவுப் பாதுகாப்பு சட்டத்தை இன்னும் நிறைவேற்றவில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழ், வறுமைக் கோட்டுக்கு மேல் என்ற பிரிவுகள் உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் அகற்றப்பட்டு விட்டன. மாறாக, அனைத்து ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் மாதத்துக்கு தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை கிலோ ஒரு ரூபாய் அல்லது 3 ரூபாய்க்கு பெறுவதை உணவுப் பாதுகாப்பு சட்டம் உறுதி செய்கிறது.தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் மற்றும் வறுமைக் கோட்டுக்கு மேல் என வேறுபாடு இல்லாததால், வசதிபடைத்தவர்களும் இலவச அரிசி உள்ளிட்ட சலுகைகளைப் பெறுகின்றனர். இதனால், உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தத் தவறினால், கூடுதல் விலையில் அரிசி வாங்க வேண்டியிருக்கும் என தமிழகம் மற்றும் கேரளாவை மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த மாதம் எச்சரித்திருந்தார்.அதற்கேற்ப, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகம், கேரளாவுக்கு ஒதுக்கப்படும் அரிசி ‌மற்றும் கோதுமையின் விலை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் ரேஷனில் இலவச அரிசிவிநியோகிக்கப்படுவதால், இப்போது ஏற்படவுள்ள கூடுதல் செலவை அரசுஏற்குமா அல்லது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சேர்ந்து கிலோ 3 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...